ஆக்ஸ்போர்டு மருந்தில் தவறு! உண்மையினை ஏற்றுக் கொண்ட இங்கிலாந்து!

28 November 2020 அரசியல்
vaccination.jpg

இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டு உள்ள கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்தானது, தரமற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகமெங்கும் பரவி இருக்கின்ற கொரோனா வைரஸிற்கு எதிராக, உலகின் பல முன்னணி நாடுகளும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் தடுப்பூசியினைத் தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் விஷயமாக இருப்பது இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனமான ஆஸ்ட்ரோஜெனிக்கா இணைந்து உருவாக்கிய தடுப்பூசி தான்.

கடந்த மார்ச் மாதமே, இந்த மருந்தானது பரிசோதனைக்கு வந்துவிட்டது. இந்த மருந்தினை, உலகின் பல நாடுகளில் பரிசோதனை செய்து வந்தனர். அதன் மூன்று கட்ட பரிசோதனைகளும் முடிக்கப்பட்டு, முடிவுகளும் தற்பொழுது வெளியாகி இருந்தன. அந்த மருந்தானது, 92% பாதுகாப்பானது என இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் பேசியிருந்தார். இந்த சூழலில், ஆஸ்ட்ரோஜெனிக்கா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மைக்கேல் மீக்செல் பேசுகையில், இந்த மருந்தின் மீதான சோதனையானது, அதி உயர் தரத்தில் நடத்தப்பட்டு உள்ளது என்றார்.

எங்கள் நிறுவனத்தின் அதிகாரியான மெனெலஸ் பங்கலோஸ், சோதனைக் குறித்தத் தகவல்களை இரகசியமாக வைத்திருந்தார். இதனால், பெருமளவிலான விஷயங்களைப் பற்றி தெளிவானப் புரிதல் ஏற்படவில்லை என்றுக் கூறியுள்ளார். அமெரிக்காவினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், இந்த மருந்தானது பல விஷயங்களை மறைப்பதாகவும், தரப் பரிசோதனையில் முன்னுக்குப் பின் முரணானத் தகவல்களே வெளியாகி வருகின்றன என்றுக் கூறுகின்றனர். மேலும், முதியோர்கள் மீதான இந்த மருந்தின் பரிசோதனையானது தெளிவாகவும் விளக்கமாகவும் இல்லை என்றுத் தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே, ஆஸ்ட்ரோஜெனிக்கா தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், குறைந்த அளவிலான மருந்தினை இரண்டு முறை எடுத்துக் கொள்ளும் பொழுது, 90% பலன்கள் கிடைப்பதாகவும், முழுமையாக இரண்டு டோஸ்களை எடுத்துக் கொள்ளும் பொழுது, வெறும் 70.8% பலன்களே கிடைக்கின்றன எனவும் கூறியுள்ளது.

பொதுவாக முழுமையாகப் பயன்படுத்தினால் தான், எதிலும் நல்லதொரு பலன் கிடைக்கும். இந்த மருந்தில் இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் வெளியாகி வருவதால், பெருந்தொற்றுக்கு எதிரான மருந்து வெளியாவதில் புதிய தொல்லை ஏற்பட்டு உள்ளது.

HOT NEWS