இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் வழங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பதம் விருதுகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ஏழு பத்ம விபூசன் விருதுகளும், 10 பத்ம பூசன் விருதுகளும், 102 பத்ம ஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதில் கலைப் பிரிவில் மறைந்த பாடகர் மறைவுக்கு பிந்திய விருதாக, எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு பத்மவிபூசன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தினை சேர்ந்த யாருக்கும் பத்ம பூசன் விருதுகள் அறிவிக்கப்படவில்லை. பத்ம ஸ்ரீ விருதுகளை தமிழர்கள் பலர் பெற உள்ளனர். விளையாட்டு வீராங்கணை பி அனிதா விளையாட்டிற்காகவும், சுப்பு ஆறுமுகம் கலைப் பிரிவிலும், புதுச்சேரியினைச் சேர்ந்த கே கேசவசாமிக்கு கலைப் பிரிவிலும், கல்வி மற்றும் இலக்கியம் என்றப் பிரிவின் கீழ் தமிழறிஞர் சாலமன் பாப்பையாவிற்கும், விவசாயம் சார்ந்த பிரிவில் பாப்பம்மாளுக்கும், பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ராமநாதனுக்கும், மறைந்த கேசி சிவசங்கருக்கு கலைப் பிரிவிலும், மறைந்த பி சுப்ரமணியனுக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவிலும், மறைந்த மருத்துவர் திருவேங்கடம் வீரராகவனுக்கு மருத்துவர் பிரிவிலும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் ஸ்ரீதர் வேம்புவிற்கும் வழங்கப்பட உள்ளன.
தமிழர்கள் விருது வாங்குவதையொட்டி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் தங்களுடையப் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.