பாகிஸ்தானில் யாராவது கற்பழிப்பில் ஈடுபட்டு நிரூபிக்கப்பட்டால், அவருடைய ஆண்மையானது நீக்கப்படும் என, பாகிஸ்தான் அரசுக் கூறியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில், நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரானக் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தக் குற்றங்களுக்குக் கடுமையானத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என, எதிர்கட்சிகள் கூறி வந்தன. பாலியல் மற்றும் கற்பழிப்பு உள்ளிட்டவைகளைக் குறைக்கும் பொருட்டு, புதிய தண்டனைகளை வழங்க இம்ரான்கான் தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக, புதிய தண்டனையினை அந்நாட்டு அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
அதன்படி, இனி பாலியல் மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் விரைவாக, 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கப்படும் எனவும், கற்பழிப்பில் ஈடுபட்டு நிரூபிக்கப்பட்டால், கட்டாயம் அந்தக் குற்றத்தில் ஈடுபடும் நபர்களின் ஆண்மையானது, இராசாயனத்தினைப் பயன்படுத்தி, நீக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் அதிபர் தற்பொழுது அனுமதி வழங்கி உள்ளார்.