அமேசானில் எதை எதையெல்லாம் விற்கின்றார்கள் என, நாளுக்கு நாள் சுவாரஸ்யமான விஷயங்கள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் புதிய செய்தியொன்று வெளியாகி உள்ளது.
அமேசான் வலைதளமானது, உலகின் பல நாடுகளிலும் இயங்கி வருகின்றது. அதில் அனைத்துப் பொருட்களும் சலுகைகளுடன் விற்கப்பட்டு வருகின்றன. இதனை பல கோடி நபர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அமேசானில் புதியதாக வேப்பங்குச்சி, மாட்டு வறட்டி, மாவிலை உள்ளிட்டவைகளும் விற்கப்படுகின்றன. இந்த மாட்டின் வறட்டியினைப் பற்றித் தெரிந்து கொள்ளாதப் பலரும், இதனை வாங்க முயல்கின்றனர். அப்படி தான் ஒரு நபர் அதனை வாங்கியிருக்கின்றார்.
அதனை கேக் என நினைத்து வாங்கி உண்ட ஒருவர், அதற்கு ரிவ்யூவும் எழுதி உள்ளார். அவர் அந்த மாட்டு வறட்டி கேக்கினை உண்டதாகவும், அது உண்பதற்கு மொறுமொறுப்பாகவும், களிமண் போலவும் இருந்ததாக கூறியுள்ளார். மேலும், இது சுவையற்று இருப்பதாகவும், புள்ளைக் கடித்துத் திண்பது போன்று இருக்கின்றது எனவும், இதில் ஏதாவது சுவையிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளார்.
இது மாட்டின் கழிவு என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், கடித்து உண்ட நபரின் விமர்சனக் கருத்தினை, பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.