ரஜினி, கமல் மற்றும் வட மாநிலத்தினைச் சேர்ந்தக் கட்சியானது, கூட்டணி வைத்து தோல்வியினை சந்திக்கும் என, அகஸ்தியர் ஜீவ நாடி ஜோதிடர் பாபு கூறியுள்ளார்.
இந்திய அளவில் நாளுக்கு நாள் பிரசித்துப் பெற்று வரும் ஜோதிடராக, ஜீவ நாடி ஜோதிடர் பாபு இருந்து வருகின்றார். அவர் அகஸ்தியரிடம் பதில் கேட்டு, நம்முடையக் கேள்விகளுக்குப் பதில் அளித்து வருகின்றார். அவரிடம் தற்பொழுது தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்து, கருத்துக் கேட்க்கப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த பாபு, வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கூட்டணி வைப்பார்கள்.
அந்தக் கூட்டணியுடன் வட மாநிலக் கட்சியானது கூட்டணி வைக்கும். மூன்று கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கும். அப்பொழுது, ரஜினியின் கூட்டணியானது படுதோல்வி அடையும் என்றுக் கூறியுள்ளார். அந்த வட மாநிலக் கட்சியானது பாஜகவாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு பாஜக தன்னுடைய முழு ஆதரவினையும் வழங்கி வருகின்றது. இதனை வைத்துப் பார்க்கும் பொழுது, கட்டாயம் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் பாஜக ஆகியக் கட்சிகள் கூட்டணி வைக்கும் என்றுத் தெரிகின்றது.
ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் இருந்து வருகின்ற போதிலும், தற்பொழுது பாகஜவினர் அதிமுகவினைக் குறை சொல்லி வருகின்றனர். மேலும், கமல்ஹாசனும், தேர்தலில் எவ்விதக் கழகத்துடனும் கூட்டணிக் கிடையாது என்றுக் கூறியுள்ளார். இதனால், கட்டாயம் இந்தக் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகின்றது.