வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்த், தன்னுடைய மன்றத்தினரை பூத் வேலைகளை வேகமாக செய்யக் கூறியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வருகின்ற டிசம்பர் 31ம் தேதி அன்று, தன்னுடைய அரசியல் கட்சிக் குறித்த அறிவிப்பினை வெளியிட உள்ளதாகவும், புத்தாண்டு அன்று புதிய அறிவிப்புகளை கூற உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். வருகின்ற பொங்கலன்று அவருடையக் கட்சியின் பெயரானது அறிவிக்கப்பட்டு, கட்சி ஆரம்பிக்கப்படும் என்றுக் கூறப்படுகின்றது. ஆனால், அதற்கு முன்னரே கட்சியின் வேலைகள் அனைத்தும் தற்பொழுது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதனை அவருடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தான், கவனித்து வருவதாகவும், தற்பொழுது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பூத்களிலும் தேவையான உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் எனவும், பூத் கமிட்டி மெம்பர்களை நியமிக்கும் விஷயத்தில், ஒரு தலை பட்சமாகவோ அல்லது பணம் வாங்கிக் கொண்டோ செயல்படக் கூடாது எனவும் கூறப்பட்டு உள்ளது.