தாய்லாந்து நாட்டில் தற்பொழுது பல லட்சம் மக்கள் வீதியில் இறங்கி, பல நாட்களாகப் போராடி வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில், பல லட்சம் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக, தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்-ஓச்சா, அவசர கால சட்டத்தினைப் பயன்படுத்தி உள்ளார். அதனால், போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து அறிவித்த அந்நாட்டு மன்னர், ஊரடங்கினைப் பிறப்பித்தார். அத்துடன் அவர் சும்மா இருக்கவில்லை. தன்னுடன் பத்துக்கும் அழகிகளுடன் தனியாக இருக்கும் தீவிற்கு சென்றுவிட்டார். அங்குள்ள சொகுசு விடுதிக்குள் அவர் தங்கி வருகின்றார். இந்த சூழ்நிலையில், அந்நாட்டு பிரதமர் தொடர்ந்து அங்கு உள்ள வேலைவாய்ப்பின்மை, உள்ளிட்டப் பலப் பிரச்சனைகளை சரி செய்யவில்லை என்று பொதுமக்கள் கோபப்பட ஆரம்பித்தனர்.
அந்தக் கோபத்தினைப் பயன்படுத்திய எதிர்கட்சிகள், தற்பொழுது தாய்லாந்து நாட்டின் ஆட்சியினைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாங்காக் நகரில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றால், 10 முதல் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும் என, அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.
இதனால், அந்நாட்டு பொதுமக்கள் மேலும் கோபடைந்து உள்ளனர். மூன்று விரல்களை உயர்த்தி, தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இது தற்பொழுது ஆளும் கட்சிக்கும், அந்நாட்டு மன்னருக்கும் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.