அம்பானியின் காட்டில் பணமழை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு, அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பானது, நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது.
அண்மையில், அதிக முதலீடுகளை ஈர்த்து, பெரிய அளவில் தன்னுடைய செல்வாக்கினை ரிலையன்ஸ் நிறுவனம் மாபெரும் வளர்ச்சியினை அடைந்தது. கடந்த மார்ச் மாதம், தன்னுடைய நிறுவனத்தின் கடன்கள் அனைத்தும் அடைக்கபட்டு விட்டதாக, முகேஷ் அம்பானி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மீது, பல உலகப் பிரசித்திப் பெற்ற நிறுவனங்கள், முதலீடுகளை செய்யத் தொடங்கின. இந்த காரணத்தால், உலகின் டாப்10 பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி இணைந்தார்.
இந்த சூழ்நிலையில், இந்தியா முழுவதும் தன்னுடைய ஈகாமர்ஸ் வியாபாரத்தினை விரிவுபடுத்தும் செயலில், அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்கி உள்ளது. அந்த நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும், ரிலையன்ஸ் ரீட்டைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம், தற்பொழுது ப்யூச்சர் குரூப் பங்குகளை வாங்கி உள்ளது. அந்த நிறுவனம், 24,713 கோடி மதிப்புடைய ப்யூச்சர் குரூப் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி உள்ளதால், தற்பொழுது ரீட்டைல் தொழிலின் அரசனாக ரிலையன்ஸ் நிறுவனம் மாறியுள்ளது.
ரீட்டைல் வர்த்தகத்தின் அரசனாக இருந்து வந்த கிஷோர் பியானியின் ப்யூச்சர் க்ரூப் நிறுவனமானது, தன்னுடைய குடவ்ன்கள், நிறுவனங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் தற்பொழுது அம்பானிக்கு விற்றுள்ளது. இதனால், கிட்டத்தட்ட ரீட்டைல் வர்த்தகம் முழுவதையும், அம்பானி கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.