தயவு செய்து போராட்டங்கள் வேண்டாம்! ரஜினி மக்கள் மன்றம் கோரிக்கை!

07 January 2021 அரசியல்
rajinionlockup.jpg

ரஜினியின் ஆதரவாளர்களும், ரசிகர்களும் தயவு செய்து போராட்டங்கள் எதனையும் நடத்த வேண்டாம் என, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிக் கடிதம் எழுதியுள்ளார்.

ரஜினிகாந்த் இந்த ஆண்டு அரசியல் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து இருந்தார். இதனிடையே, டிசம்பர் 29ம் தேதி அன்று, பரபரப்பான அறிக்கை ஒன்றினை அவர் வெளியிட்டார். அதில், தன்னுடைய உடல்நிலையினைக் கருத்தில் கொண்டு, அரசியிலில் தான் ஈடுபடப் போவதில்லை என அவர் அறிவித்தார். இது ரஜினிகாந்தின் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்தின் வீட்டின் முன் குவிந்த அவருடைய ஆதரவாளர்கள், போராட்டங்களில் ஈடுபட்டனர். ஏரியாவில் எல்லாரும் கிண்டல் செய்வார்கள் எனவும், உறவினர்கள் கடுமையாகக் கேலி செய்கின்றனர் எனவும், ரஜினிகாந்த் கட்டாயம் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் எனவும் போராட்டங்களில் ஈடுபட்டனர். ரஜினிக்காக பல லட்சங்களை நாங்கள் செலவு செய்துள்ளோம், எங்களுக்கு ரஜினிகாந்த் நியாயம் வழங்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்து உள்ளனர். இவைகள் வேண்டாம் எனவும், உண்மையான ரஜினிகாந்த் ரசிகன் போராட்டத்தில் ஈடுபடமாட்டர்கள் எனவும் ரஜினி மக்கள் மன்றம் கூறியது. இந்த சூழலில், தற்பொழுது அம்மன்றத்தின் நிர்வாகி விஎம் சுதாகர், மாவட்ட நிர்வாகிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ரஜினிகாந்த் நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இந்தத் தேர்தலில் ஈடுபடவில்லை என்றும், மருத்துவர்கள் அறிவுரையே பிரதானக் காரணமாகவும் கூறியுள்ளார்.

ஆனால், பலர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும், தாங்கள் செலவு செய்த பணத்தினை திருப்பிக் கேட்டும் பேசி வருகின்றனர். இது நம் தலைவரின் மனதினை நோகடிக்கும் செயலாகும். இவ்வாறு ஈடுபட வேண்டாம் எனவும் எழுதியுள்ளார்.

HOT NEWS