சாய்னா நெஹ்வால் தோல்வி! பேட்மிண்டனில் தொடரும் தோல்விகள்!

13 November 2019 விளையாட்டு
sainanehwal.jpg

பிவி சிந்து தான், தொடர்ந்து நான்கு சான்பியன்ஷிப் போட்டிகளிலும், முதல் சுற்றுகளிலேயே வெளியேறினார் என்றால், அவருக்கு சளைக்காமல், சாய்னா நெஹ்வாலும் தோல்விகளைத் தழுவி வருகின்றார்.

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா நெஹ்வால், சீனாவின் சை யான் யானிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

கடந்த ஆறு சாம்பியன்ஷிப் போட்டிகளில், ஐந்தாவது முறையாக சாய்னா நெஹ்வால் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். அவர் சீனாவின் சை யான் யான்னிடம் 13-21, 20-22 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவினார். உலகளவில் ஒன்பதாவது இடத்தில் உள்ள சாய்னா சிறிய வீராங்கணைகளுடன் தோல்வியடைந்ததால், அவருடைய ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

HOT NEWS