இந்தியன் 2 படத்தினை இயக்கி வந்த ஷங்கர், தற்பொழுது தெலுங்கு படத்தினை இயக்கப் போவதாக அறிவித்து உள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக லைகா தயாரிப்பில் உருவாகி வருகின்ற திரைப்படம் இந்தியன் 2. இந்தப் படத்தினை இயக்குநர் சங்கர் இயக்கி வந்தார். இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். அனிருத் இசையமைத்து வந்தார். இப்படத்தின் சூட்டிங்கின் பொழுது எதிர்பாராத விதமாக கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால், 3 பேர் பலியாகினர். இந்நிலையில், பலத் தடங்களுக்கு மத்தியிலும், இதனை எடுத்து முடிக்க சங்கர் முயன்று வந்தார்.
ஆனால், கமல்ஹாசனுக்கும், தயாரிப்பாளர் லைகாவிற்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டக் காரணமாக இப்படமானது இழுபறியில் இருந்து வந்தது. மேலும் கொரோனா பாதிப்பு வேறு ஏற்பட்டதால், இந்த படத்தின் சூட்டிங்கானது தள்ளி வைக்கப்பட்டது. தற்பொழுது வரை, இப்படமானது எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், கமலுடன் இணைந்து 3 ஆண்டுகளைத் தொலைத்து விட்ட சங்கர், இனியும் காலத்தினை தாமதிக்காமல் புதிய படத்தினை இயக்க முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில், ஸ்ரீவெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராம் சரண் நடிப்பில் புதிய படம் ஒன்றினை இயக்க உள்ளதாக, சங்கர் அறிவித்து உள்ளார். அவர் ஏன் தெலுங்கிற்குச் சென்றார், தமிழில் படம் எடுக்க வாய்ப்பில்லையா, புதியதாக படம் எடுக்கச் செல்வதால் இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதா எனப் பலக் கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில், கமல்ஹாசனால் சங்கரின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது.
இதனிடையே, தற்பொழுது கமல்ஹாசன் புதியதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தினை ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால், லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள், இவருக்கும் சங்கரின் நிலை ஏற்பட்டு விடுமோ என கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், இந்தப் படத்தினை, கமல்ஹாசனின் சொந்த நிறுவனமான ராஜ்கமல்பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமே தயாரிக்கின்றது என்பதால், பணம் வீணாகாமல் இருக்கும் பொருட்டு படம் எடுக்கப்பட்டுவிடும் எனக் கூறப்படுகின்றது.