தமிழ்நாட்டில் பல ஆயிரம் சித்தர்கள் பிறந்து, வாழ்ந்து, மறைந்துள்ளனர். அவர்கள் பல விஷயங்களைக் கணித்து எழுதியிருக்கின்றனர். அவர்களில் இடைக்காடர் எனும் சித்தர் தமிழ் காலண்டரின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் எனக் கணித்துள்ளார். அவருடையக் கணிப்புகள் அனைத்தும் துல்லியமாகவும், நடைபெறக் கூடியதாகவும் இருந்து வருகின்றன.
அவ்வாறு தமிழ் சித்தர் இடைக்காடர் 2021ம் ஆண்டு என்ன நடக்கும் என்பது குறித்துப் பலத் தகவல்களை கூறியிருக்கின்றார். அதற்கு முன்னர் 2020ம் ஆண்டு அவர் கூறிய பலன்கள் நடைபெற்றதா என முதலில் பார்த்துவிட்டு, பின்னர் 2021ம் ஆண்டுக்கானப் பலன்களைப் பார்ப்போமா?
2020 ஏப்ரல் 14ம் தேதி முதல் 2021ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வரை, சார்வரி வருடம் நடப்பில் இருக்கும். 2021ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி முதல் 2022ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வரை பிலவ வருடம் நடப்பில் இருக்கும். இந்த சார்வரி வருடம் குறித்து இடைக்காடர் தன்னுடைய பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
சாருவரி ஆண்டதனில் சாதிபதினெட்டுமே தீரமறு நோயால் திரிவார்கள். மாரியில்லை பூமி விளைவில்லாமல் புத்திரரும் மற்றவரும் ஏமமின்றி சாவார்கள் இயம்பு. இந்தப் பாடலில் சார்வரி வருடம் முழுக்க எவ்வாறு இருக்கும் எனக் கணித்துள்ளார். அதாவது, 2020 ஏப்ரல் 14 முதல் 2021 ஏப்ரல் 13 வரை நோய் பாதிப்பு இருக்கும் எனவும், விவசாயத்தில் நல்லதொரு விளைச்சல் இருக்காது எனவும், மருந்து கிடைக்காமல் மக்கள் மரணமடைவர் எனவும் கூறியுள்ளார். இது தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது.
2021ம் ஆண்டுக்கான பாடலில், பிலவத்தின் மாரி கொஞ்சம் பீடை மிகும். ராசர் சலம் மிகுதி துன்பத் தருக்கும். நலமில்லை நாலுகால் ஜீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை பாலுமின்றிச் செய்புவனம் பாழ். இந்தப் பாடலானது 2021ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி முதல் இந்த ஆண்டு முழுக்க நடைபெற உள்ள விஷயங்களை சுருக்கமாக உணர்த்துகின்றது. அதன்படி, இந்த ஆண்டு பணப் பிரச்சனை, பணத் தட்டுப்பாடு ஏற்படும். அரசாங்கத்தினை ஆள்பவர்களுக்கும், ஆட்சி செய்பவர்களின் உயிருக்கும் ஆபத்து உண்டாகும். வேளாண்மை நன்றாக இருக்காது.
கால்நடை உயிரினங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். கடுமையான உணவுப் பிரச்சனை உண்டாகும். அதன் விளைவாக, கால்நடைகளும், பிற உயிரினங்களும் உணவின்றி மடியும். நிலமும் பாழாகும். அத்துடன் நிலத்தடி நீர்மட்டமும் அதிரடியாகக் குறைந்து போகும் என்றுக் குறிப்பிடப்பட்டு உள்ளது. எப்பொழுதும் சித்தர்களின் வாக்கு நிச்சயம் பழிக்கும் என்பது நிதர்சணமான உண்மை. எனவே, நாம் தான் நம்மை முன்னெச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.