பீச் பாலிலும் ஃபோர் அடித்த ஸ்மித்! ஆஷஸ் ருசிகரம்!

06 September 2019 விளையாட்டு
smithhitsbeachball.jpg

ஆஷஸ் தொடர், இங்கிலாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்நிலையில், நான்காவது போட்டியானது. இங்கிலாந்தில் உள்ள, மென்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலிய அணி, தற்பொழுது பேட்டிங் செய்து வருகின்றது. இந்நிலையில், முதல் நாள் ஆட்டதின் பொழுது சுவரஸ்யமான நிகழ்வு நடைபெற்றுள்ளது. அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது, ரசிகர்கள் வைத்து விளையாடிக் கொண்டு இருந்த பீச் பால், மைதானத்திற்குள் வந்துவிட்டது. மேலும், அது காற்றில் பறந்து, உருண்டு ஸ்மித்திடம் வந்தது.

அதனைப் பார்த்த ஸ்மித், சற்றும் யோசிக்கமால் அதனையும் தன்னுடைய பேட்டால் அடித்தார். அந்தப் பந்தும், பவுண்டரி லைனை நோக்கிச் சென்றது. இதனைத் தற்பொழுது, சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

HOT NEWS