உலகின் மிக பெரிய விதை வங்கி! உலக அழிவிலிருந்து காக்க உருவாக்கப்பட்டதா?

14 October 2020 அமானுஷ்யம்
svalbardseedbank.jpg

உலகளவில் இயற்கையின் மீதான அக்கறையானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில், உலகிலேயே அதிக விதைகளைக் கொண்ட விதை வங்கியானது, நார்வேயில் அமைந்துள்ளது.

ஆர்க்டிக் கடற்பகுதியில் இருந்து 13000 கிலோமீட்டர் தொலைவில், உள்ள நார்வே நாட்டில் தான் இந்த ஸ்வால்பார்ட் விதை வங்கியானது அமைந்துள்ளது. கடந்த 26 பிப்ரவரி, 2008ம் ஆண்டில் இது முழுமையாக திறக்கப்பட்டது. இது மொத்தமாக 8.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையுது ஆகும். இதில் 11,000 சதுர அடி அளவிற்கு பாதுகாப்பு அமைப்பு உள்ளது. அதில், விதைகளை சேமித்து வைத்து உள்ளனர். நம்முடைய நாட்டில், தமிழ் கலாச்சாரப்படி, கோயில் கலசங்களில் நவதானியங்களை சேகரித்து வைப்பர்.

ஒருவேளை பஞ்சமோ, பேரழிவோ அல்லது வெள்ளமோ ஏற்படும் பட்சத்தில், இந்த விதைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதனடிப்படையிலேயே இந்த விதை வங்கி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த விதை வங்கியில், உலகில் உள்ள அனைத்துத் தாவரங்களின் விதைகளில் 3 ஒரு பங்கு வகை விதைகள் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு உள்ளன. தற்பொழுது வரை, இங்கு, 2,00,00,000 விதைகளின் வகைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

உலகிலேயே இவ்வளவு விதைகள் பாதுகாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இங்குள்ள விதைகள் அனைத்தும், அமெரிக்கா, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளால் அனுப்பி வைக்கப்பட்டது ஆகும். இந்த நாடுகளின் விதைகள் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒருவேளை மனித இனம் இதுவரைப் பார்த்திராத பெரிய வகையிலான அழிவினை சந்தித்தால், அவர்கள் உண்பதற்கு என்ன செய்வது என்றப் பிரசன்னை வராத வகையில் இது உருவாக்கப்பட்டு உள்ளது.

இங்குள்ள விதைகளைப் பயன்படுத்தி, மீண்டும் விவசாயம் செய்து, மனித இனத்தினைக் காப்பாற்ற இயலும் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் தான் இந்த விதை வங்கியானது உருவாக்கப்பட்டு உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறு இருப்பினும், இந்த விதைகள் அனைத்தும் சராசரி மக்களுக்காகப் பயன்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறிய விஷயமே.

HOT NEWS