21 பெண்களை கொலை செய்த ராமலு! தெலுங்கானாவில் ஒரு மன்மத சைக்கோ!

29 January 2021 அரசியல்
psycho.jpg

தெலுங்கானாவில் 21 பெண்களை திருமணம் செய்து பின்னர் கொலை செய்த சைக்கோவினை, போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழிலில் சிவப்பு ரோஜாக்கள் மற்றும் மன்மதன் ஆகியப் படங்கள் திரைக்கு வந்து, சூப்பர் ஹிட் அடித்தன. அதனைக் காட்டிலும் மிகவும் கொடூரமான செயல் ஒன்றானது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் உள்ள ஜூப்ளி ஹீல்ஸ் பகுதியில் வசித்து வருபவர் கவலா அனந்தையா. அவர் போலீசில் தனது மனைவியினைக் காணவில்லை எனப் புகார் அளித்தார். அதனை விசாரித்த போலீசார், காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெண்ணின் சடலத்தினை 4 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஏனெனில், இறந்து கிடந்த பெண்னின் முகமானது எரிக்கப்பட்டு இருந்தது. இதனால், அப்பெண் கொலை செய்யப்பட்டு இருந்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, யார் கொலை செய்துள்ளார்கள் போலீசார், தங்களுடைய விசாரணையினை விரிவுபடுத்தினர். அங்கிருந்த சிசிடிவியின் காட்சிகளை போலீசார் கவனித்ததில் சங்கா மாவட்டத்தில் வசித்து வருகின்ற ராமலு என்பவர் தான், இந்தக் கொலையினை செய்துள்ளார் என்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ராமலுவின் பேச்சானது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில், இது இவர் செய்த 21வது கொலையாம். இதற்கு முன்னர், இதே போன்று 20 பெண்களை கொலை செய்துள்ளாராம். அவருடைய 21வது வயதில், அவருக்கு அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.

ஆனால், திருமணமான ஒரு சில காலத்திலேயே, அவருடைய மனைவி வேறொருவருடன் ஓடிவிட்டார். இதனால், பெண்கள் என்றாலே அப்படித்தான் என்ற மனநிலைக்கு ராமலு வந்துவிட்டார். பெண்களை கொலை செய்வதை குறிக்கோளகக் கொண்டவர், முழு சைக்கோவாகவே மாறிவிட்டார். 2003ம் ஆண்டு தொடங்கி, 2019ம் ஆண்டு வரை மட்டும் சுமார் 16 பெண்களை கொலை செய்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுடன் சேர்த்து 21 பேர். பலமுறை கொலை வழக்கில் கைதான ராமலு, ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

பின்னர், மீண்டும் தன்னுடைய கொலைவெறி படலத்தினைத் தொடர்ந்துள்ளார். தலைமறைவாக வாழ்ந்து வந்த இவர், கொலை செய்யும் பொழுது, அந்தப் பெண்களிடம் இருந்து, நகைகள், பணம் முதலியவைகளை எடுத்துக் கொள்வார். இதனை தற்பொழுது கண்டுபிடித்துள்ள போலீசார், இதுவரை மாயமான பெண்களின் புகைப்படங்களைக் காட்டி, ராமலுவிடம் விசாரித்து வருகின்றனர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகளும், மர்மங்களும் வெளிப்படலாம் எனவும், அதற்காக போலீசாரும் தற்பொழுது காத்திருப்பதாகவும் தெரிகின்றது.

HOT NEWS