சோனு சூட்க்கு கோயில் கட்டிய தெலுங்கானா கிராம மக்கள்! நெகிழ்ந்த சோனு!

21 December 2020 சினிமா
sonusoodtemple.jpg

கொரோனா ஊரடங்கின் பொழுது, பல்வேறு உதவிகளை செய்த நடிகர் சோனு சூட்டிற்கு, தெலுங்கானா கிராம மக்கள் கோயில் கட்டியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கானது, கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அந்த அறிவிப்பால், பல கோடி இந்தியர்கள் புலம் பெயர்ந்து, தங்களுடையச் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டனர். இவர்களுக்குப் போதிய உணவு, உடை மற்றும் போக்குவரத்து வசதிகளை யாரும் முதலில் செய்யவில்லை. மத்திய அரசுகளும், மாநில அரசுகளும் பெரிய அளவில் உதவிகளை அறிவிக்கவில்லை. இந்த சூழலில், பலத் தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்களும் தாமாக முன் வந்து உதவிகளை அறிவித்தனர். அதில் அனைவராலும் புகழப்படுபவராக மாறியவர், இந்திய முன்னணி நடிகர் சோனு சூட். அவர் தன்னுடைய வீட்டுப் பத்திரம் மற்றும் சொத்துப் பத்திரத்தினை அடமானம் வைத்து, பல ஆயிரம் பேருக்கு உதவிகளை வாரி வழங்கினார்.

அவருக்கு இந்தியாவின் பலரும் தங்களுடைய ஆதரவினை வழங்க ஆரம்பித்தனர். இந்த சூழலில், தற்பொழுது அவருக்கு நன்றித் தெரிவிக்கும் பொருட்டு, தெலுங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டத்தில் உள்ள தப்பா தந்தா கிராமத்தில், சோனு சூட்டிற்கு புதியதாகக் கோயில் கட்டப்பட்டு உள்ளது. இது குறித்து பேசும் அக்கிராம மக்கள், சோனு சூட் இந்த சமூகத்திற்கும், பொதுமக்களுக்கும் பல நன்மைகளைச் செய்கின்றார் எனவும், அதற்காகவே நாங்கள் அவருக்கு கோயில் கட்டி உள்ளோம் எனக் கூறியுள்ளனர்.

HOT NEWS