கிராக்கன் எனும் கடல் மிருகத்தினை பற்றி தெரியுமா? கப்பல்களின் சிம்ம சொப்பணம்!

16 December 2020 அமானுஷ்யம்
kraken1.jpg

உலகளவில் தினமும் பேசப்படும் விஷயமாகவும், தேடப்படும் விஷயமாகவும் பல மர்மங்களும், வரலாற்று நிகழ்வுகளும் இருந்து வருகின்றன. அவைகளில் பெரும்பாலும் மர்மமான அமானுஷ்யமான மிருகங்கள், அமானுஷ்யமான சக்திகள், புதையல்கள் முதலியவையே பிரதான தேடும் விஷயமாக இருந்து வருகின்றன. அப்படிப்பட்டவைகளில் முதலிடத்தில் இருப்பது கிராக்கன் எனும் கடல் அரக்கன் தான்.

kraken1.jpg

இந்த கிராக்கன் என்பது கடலில் இருந்ததாக அல்லது இருக்கின்றது என நம்பப்படுகின்ற இராட்சத ஆக்டோபஸ் மிருகமாகும். இந்த மிருகத்தினைப் பற்றி, சீனா, ஜப்பான், கிரேக்கம் உள்ளிட்டப் பலக் கலாச்சாரங்களில் கூறப்பட்டு உள்ளது. இருப்பினும், கிரேக்கத்திலும் சரி, சீனக் கலாச்சாரங்களிலும் சரி, இதனைப் பற்றி அதிகளவில் பேசப்பட்டு உள்ளன. இதனை பற்றி முதன் முதலில், 13ம் நூற்றாண்டில் ஐஸ்லாண்டு நாட்டில் பேசியிருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து, இது பல நாடுகளில் வசித்து வருகின்ற மக்களால் பேசப்பட்டு வருகின்றது. இதனை முதலில் ஆர்வர்-ஆட்ர் எனவும், பின்னர் ஹஃகூஃபா (கடல் பனி) எனவும், லிங்பக்கர் (காட்டுச் செடி) எனவும் கூறினர். இதனையே கிராக்கன் எனவும் பின்னாட்களில் கூறப்பட்டதாக அறியப்படுகின்றது. நார்வே விஞ்ஞானிகள் தங்களுடைய ஆய்வில், இந்த கிராக்கன் குறித்து பல விஷயங்களைக் கூறியிருக்கின்றனர். அதில், உலகிலேயே வெறும் 2 கிராக்கன்கள் மட்டுமே இருக்கின்றது எனவும், அதிக உணவு இல்லையென்றால், அவை இறந்து விடும் எனவும் கருதுகின்றனர்.

தனக்கு பசிக்கும் பொழுது, தன்னுடைய உடலில் இருந்து ஒரு வித வாசனைப் பொருளை அது சுரக்கும் எனவும், அது மீன்களை அதனருகில் வர வைக்கும் எனவும், அந்த மீன்களை இந்த கிராக்கன் மொத்தமாக வாயில் போட்டு விழுங்குவிடும் எனவும் கூறுகின்றனர். அல்லது பசிக்கும் பொழுது, மலம் கழிக்கும் எனவும், அதன் வாசனையால் மயங்கிய மீன்கள், அதனை உண்ண வரும் பொழுது, அந்த மீன்களை உண்டு விடும் எனவும் கூறுகின்றனர்.

இந்த கிராக்கனானது, பார்ப்பதற்கு மாபெரும் ஆக்டோபஸ் போல இருக்கும். இதற்கு நூறு அடி உயரமுடைய ராட்சத, ஆக்டோபஸ் கைகள் இருக்கும் எனவும், அதனால், இதனிடம் சிக்கும் எதுவும் உயிர் பிழைக்காது எனவும் கூறுகின்றனர். கடைசியாக இந்த மிருகத்தினைப் பற்றி, 1746ம் ஆண்டு வெளியான பௌனா சூசிக்கா என்ற நூலிலும் குறிப்பிட்டு உள்ளனர். இது நார்வே நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றது எனவும், இது மிருகம் அல்ல எனவும், இது வேறு ஒரு வகை உயிரினம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

kraken1.jpg

இவ்வளவு பெரிய அளவில் இருந்த போதிலும், இது மனிதர்களுடன் அதிகளவில் தொடர்புப்படுத்தப்படவே இல்லை என, வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மனிதர்களை வேட்டையாடவும் இல்லை, மனிதர்கள் இருக்கும் இடங்களுக்குள் நுழையவும் இல்லை. அவ்வாறு நுழைந்ததாற்கான சான்றுகளும் இல்லை. ஆனால், இந்த கிராக்கனைப் பற்றி பேசாமல் இருந்ததற்குப் பலக் காரணங்களும் கூறப்படுகின்றன. இந்த கிராக்கனின் கைகளில் சிக்கிவிட்டால், தப்பிக்க இயலாது எனவும், அப்படி இருக்கையில் எவ்வாறு இதனைப் பற்றிக் கூற இயலும். யாராவது இதனைப் பார்த்து விட்டு தப்பித்து வந்தால் தானே, இதனைப் பற்றிக் கூற இயலும் எனவும் பலர் கூறுகின்றனர்.

இந்த மிருகம், புவிக்குச் சொந்தமானது அல்ல எனவும், இது வேற்றுக் கிரகத்தினைச் சேர்ந்தது எனவும், புவியில் உள்ள கடல்களில் இரகசியமாக வசித்து வருகின்ற ஏலியன்கள், தங்களை மனிதர்கள் தாக்காமல் இருப்பதற்கு, இதனைக் கடலில் விடுவித்து உள்ளனர் எனவும், அப்பொழுது தான், ஆழ்கடலில் வசித்து வருகின்ற ஏலியன்களுக்கு மனிதர்களால் தொல்லை இருக்காது எனவும், மனிதர்கள் இந்த மிருகத்திற்குப் பயந்து, ஏலியன்களை நெருங்கவோ, தொந்தரவு செய்யவோ மாட்டார்கள் எனவும் விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.

kraken1.jpg

தற்காலங்களில் இது வெறும் சினிமாக்களிலும், காமிக்ஸ்களிலும் மட்டுமே காண முடிகின்றது. இது கடலின் அடி ஆழத்தில், மனிதனால் நுழைய முடியாதபடி இருக்கின்றன எனவும், பிரளய சமயத்தில் கடலில் இருக்கும் ஏலியன்களால் திறந்து விடப்படும் எனவும் கூறப்படுகின்றன. பலக் கப்பல்களை இவை, பல சமயங்களில் சூரையாடியுள்ளன எனவும், இதன் ராட்சதக் கைகளில் சிக்கிய எதுவும் தப்பிக்க இயலாது எனவும் சீனாவில் உள்ளவர்களால் கூறப்படுகின்றது.

HOT NEWS