இரண்டு பெண் மீன்கள், ஆண் மீனின் துணையின்றி முட்டையிட்டு குஞ்சு பொறித்துள்ள சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
உலகளவில் பல அதிசயங்களும், அற்புதங்களும் இன்னும் மனித குலத்திற்குப் புலப்படாமலேயே உள்ளன. பல விஷயங்கள் புரியாமலேயே இருக்கின்றன. இந்த வினோதங்களுக்கெல்லாம் ஆதாரமாக இருப்பது, கடல் தான். கடலில் இல்லாத, நடைபெறாத அரிய வகை விஷயங்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு, கடலானது வினோதங்களின் வீடாக இருக்கின்றது.
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாண்ட் கடல்வாழ் உயிரினங்கள் அருங்காட்சியகத்தில், இரண்டு ரே வகை மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தன. ஒன்றை நிபிள் எனவும் மற்றொன்றை ஸ்பாட் எனவும் பெயர் வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன. இந்த மீன்கள் இரண்டுமே, பெண் மீன்கள் ஆகும். இவை தற்பொழுது குட்டி போட்டுள்ளன. பொதுவாக, அனைத்து உயிர்களும் பிறக்க வேண்டும் என்றால், ஆண் பெண் உயிர்கள் இணைய வேண்டும். அவ்வாறு எதுவும் நடக்காமல், எவ்வாறு குட்டி போட முடியும் என பலரும் குழம்பியிருக்கின்றனர்.
இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இதற்கு கன்னி பிறப்பு அதாவது விர்ஜின் பெர்த் என பெயர் வைத்துள்ளனர். அடைகாக்கும் உறை இல்லாமலேயே, கருவானது உருவாகி இருக்கும் எனவும், அவ்வாறு தான் இந்த அரிய வகை நிகழ்ந்துள்ளது எனவும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.