மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இன்னும் ஆறு மாதத்திற்கும் குறைவாகவே, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு காலம் உள்ளதால், தற்பொழுது கூட்டணி குறித்து பேசுவது குறித்து தமிழகக் கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை ஏற்கனவே, தங்களுடையக் கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க உள்ளன. பாஜகவும், அதிமுகவும் தங்களுடையக் கூட்டணியினை உறுதி செய்து உள்ளன நிலையில், பாஜக தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றது.
இந்நிலையில், ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி ஆரம்பிக்க உள்ளார். அவருடன் பலக் கட்சிகள் இணையும் வாய்ப்புகள் இருக்கின்றன. கமல்ஹாசன் தற்பொழுது ஏழு நாள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இந்த சூழலில், யாருடன் வேண்டும் என்றாலும், கூட்டணி அமையும் வாய்ப்புகள் இருக்கின்றன எனவும், அதனைப் பற்றி பேச வேண்டிய அவசியம் தற்பொழுது இல்லை எனவும் கூறி வருகின்றார் கமல். இந்த நிலையில், நேற்று மாலை கமல்ஹாசனை, திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசினார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பொழுது கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், அப்பொழுது மக்கள் நீதி மய்யத்திற்கு 40 தொகுதிகளை ஒதுக்கினால் கூட்டணிக்குத் தயார் என கமல்ஹாசன் கூறியதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு திமுக தயாராக இல்லை எனவும், இந்த முறை 200 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது எனவும் திமுகவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.