இயேசு பற்றி சுவாரஷ்யமான விஷயங்கள்! உண்மையில் எப்படி வாழ்ந்தார் இயேசு?

26 December 2020 அமானுஷ்யம்
jesusfacts.jpg

உலகளவில் பெரிய மதமாக இருப்பது என்றால் அது கிறிஸ்துவ மதமாகும். கிட்டத்தட்ட 300 கோடிக்கும் அதிகமானவர்கள், இந்த மதத்தினை பின்பற்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்களின் ஆஸ்தானக் கடவுகளாக இயேசு கிறிஸ்து இருந்து வருகின்றார். அவர் பற்றிப் பலவிதக் கதைகள் உலகம் முழுக்க உலா வருகின்றன. அவகைளில் உள்ள முக்கியமான மற்றும் யாருக்கும் தெரியாதவைகளைப் பற்றிப் பார்ப்போம்.

இயேசு பிறக்கின்ற பொழுது நசரத் என்ற ஊரில் இருந்தவர்களின் எண்ணிக்கையானது வெறும் 200ல் இருந்து 400 ஆக இருக்கும் என, வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவரை இஸ்லாமில் இசா அல்லது மேய்ப்பர் என அழைக்கின்றனர். இவரை, இஸ்லாமியர்களும் புனிதராகப் பார்த்து உள்ளனர். ஒரு சிலர் இயேசு 12 வயது முதல் 30 வயது வரையிலும், மர வேலைகளை செய்தார் எனக் கூறுகின்றனர். ஆனால், அவர் 18 வயது முதல் 30 வயது வரை என்ன செய்தார் என்பதற்கான வரலாற்று ஆய்வுகளோ அல்லது மதம் தொடர்பானக் கதைகளோ இல்லை.

நம்முடைய சித்தர்களைப் போல, இயேசுவும் சில சமயங்களில் ஒரு குகையில் சென்று அமர்ந்து கொள்வாராம். தனிமையில் இருக்க நினைக்கின்ற சமயங்களில், எர்மாஸ் குகை என்றுப் பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தக் குகையில், தனியாக அமர்ந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இயேசுவின் மீது பல விமர்சனமுள்ளக் கதைகளும் உள்ளன. பைபிளில் உள்ள மத்தேயூ அதிகாரம் 11 வசனம் 19தின் படி, இயேசு அதிகமாக திராட்சை ரசம் அருந்துபவராக, இத்தாலியக் கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர்.

யூதர்கள் தான் அதிகளவில் தலைமுடியினை வளர்த்துக் கொள்வார்கள். ஆனால், இயேசு அவ்வாறு பெரிய அளவிலான முடியினை வளர்க்கவே இல்லை. அவருடையக் கண்கள் ப்ரௌன் கலரிலும், தலைமுடியானது கருப்பு நிறத்திலும், உடல் தோலானது ஆலிவ் நிறத்திலும் இருந்திருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் நம்புகின்றனர். Christ என்ற பெயரானது கிரேக்க மொழியில் இருந்து வந்த ஒன்றாகும். அதற்கு அபிஷேகத்திற்குரிய ஒருவர் என்று பொருளாகும்.

இயேசுவிற்கு சகோதர, சகோதரிகளும் பிறந்திருக்கின்றனர். இயேசுவின் மறைவிற்குப் பிறகு, அவருடைய சகோதரர் ஜேம்ஸ் ஜெருசுலேம் நகரினை ஆட்சி செய்து இருக்கின்றார். இயேசுவிற்கு குறைந்தது நான்கு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருந்திருக்கலாம் என நம்புகின்றனர். அத்துடன், இயேசுவிற்கு திருமணம் ஆகியிருக்கலாம் எனவும், அவருக்குக் குழந்தைகள் இருந்திருக்கும் வாய்ப்புகள் இருக்கலாம் எனவும், வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வளவு மர்மங்களும், இரகசியங்களும் இன்று வரை இயேசு பிரானை சுற்றிச் சுற்றி வந்திருந்தாலும், அவரை நம்பி வாழ்பவர்களும், நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றனர். அதற்குக் காரணம், அவருடைய போதனைகளும், அவர் மனிதர்கள் மேல் வைத்திருந்த அன்பும் தான். அந்த அளவிற்கு அவர் ஏழ்மையானக் குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கையில் பல சிரமங்களைச் சந்தித்து, கடைசியில் வலியுடன் மரணித்தவர். இதனை, இன்று வரையிலும் வரலாறும் சரி, மனிதர்களும் சரி மறக்கவே இல்லை.

HOT NEWS