டிரம்ப் ஆதரவாளர்கள் அட்டூழியம்! வெள்ளை மாளிகை முற்றுகை! போலீஸ் தடியடி!

07 January 2021 அரசியல்
trumpprotest.jpg

அமெரிக்காவில் டிரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையில் புகுந்து சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில், ஆளும் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டெமோக்ராட்டிக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் அபார வெற்றி பெற்றார். இவருடைய வெற்றியினை எதிர்த்து, தொடர்ந்து புகார் கூறி வருகின்ற டொனால்ட் ட்ரம்ப், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கும், தற்பொழுது விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் மைக் பென்ஸ், தன்னுடைய அதிகாரத்தினைப் பயன்படுத்தி, ஜோ பிடனின் வெற்றிக்கு சான்றிதழ் அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். ஆனால், அதற்கு பென்ஸ் மறுப்பு தெரிவித்த காரணத்தால், பெண்சிற்கு தன்னம்பிக்கைக் குறைவாக உள்ளது என விமர்சித்து உள்ளார். இந்த சூழலில், தன்னுடைய வாக்குகளே அதிகமாக உள்ளது என, ப்ளோரிடாவின் தேர்தல் அதிகாரியினை தொடர்பு கொண்டு பேசிய ட்ரம்ப், அதற்கேற்றாற் போல வாக்குகளை மாற்றவும் கூறியிருக்கின்றார்.

இது பெரிய அளவில் சர்ச்சையினைக் கிளப்பி உள்ளது. அத்துடன், தற்பொழுது ட்ரம்பின் ஆதரவாளர்கள் அனைவரும் வெள்ளை மாளிகையினை முற்றுகையிட்டு உள்ளனர். வருகின்ற 20ம் தேதி அன்று அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவி ஏற்க உள்ளார். அவருக்கான வெற்றிச் சான்றிதழை வழங்க, அமெரிக்க காங்கிரஸ் செயல்பட்டு வந்தது. அதனை எதிர்த்து, ட்ரம்பின் ஆதரவாளர்கள், வெள்ளை மாளிகையினை நோக்கிச் சென்றனர். அவர்களைத் தடுத்த போலீசார், வெள்ளை மாளிகையினை சுற்றி ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்தனர்.

ஆனால், அதனைக் கண்டு கொள்ளாமல், வெள்ளை மாளிகைக்குள் புகுந்தனர் ட்ரம்பின் ஆதரவாளர்கள். அவர்கள் அமெரிக்க சபாநாயகர் அமரும் இருக்கையிலும் அமர்ந்தனர். இதனிடையே, கூட்டத்தினைக் கலைக்கும் விதமாக, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் பெண் ஒருவர் உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ட்ரம்ப், அனைவரும் அமைதிக் காக்க வேண்டும் எனவும், போலீசாரும் நம்முடன் தான் இருக்கின்றனர் எனவும் தெரிவித்து உள்ளார். அவருடைய டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களை 12 மணி நேரத்திற்கு முடக்கியுள்ளன சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்.

HOT NEWS