ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கு விசித்தி நோய் பரவியிருப்பதாகவும், அதனால் அவர் பதவி விலக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.
உலகின் நம்பர் ஒன் அரசியல்வாதியும், ரஷ்யாவின் அதிபருமான விளாடிமீர் புதின் பற்றி, நாளுக்கு நாள் புதிய புதிய தகவல்கள் தற்பொழுது வெளியான வண்ணம் உள்ளன. அவர் வருகின்ற 2036ம் ஆண்டு வரை, ரஷ்யாவின் அதிபராக ஒரு மனதாக தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார். இந்நிலையில், அவருக்கு மர்மமான நோய் தாக்குதல் உள்ளதாக, அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
68 வயதான விளாடிமிர் புதினுக்கு, பார்கின்ஷன் எனும் நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை, ரஷ்யாவின் ஆட்சியகமான க்ரெம்ளின் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது ஒரு ஆதாரமற்று செய்தி எனவும் கூறியுள்ளது. இந்த சூழலில், அவரால் தொடர்ந்து ஆட்சி செய்ய இயலாது எனவும், அவருக்குப் பதிலாக புதிய அதிபரை அவர் விரைவில் நியமிப்பார் எனவும், அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன.
அவர் உடல்நலத்தினைக் கருத்தில் கொண்டும், மருத்துவத்திற்காகவும் அவர் இவ்வாறு செய்ய உள்ளதாகவும், 2021ம் ஆண்டில் புதிய அதிபரை ரஷ்ய மக்கள் சந்திக்க உள்ளனர் எனவும், தொடர்ந்து அமெரிக்க நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.