வயதானாலும் உங்க ஆசையும், தேடலும் குறையவில்லையா, அப்போ நீங்க இதத் தான் தேடித் போகணும்! அப்படியொரு பலமான பொருள் தான் இமாலய வயகரா!
வயதாக ஆரம்பித்ததும், ஆண்களின் பிறப்புறுப்பானது சிறிதாவது மட்டுமின்றி, விறைப்புத் தன்மை, மலட்டுத் தன்மை முதலியவற்றால் கடுமையாக பாதிக்கப்படுகின்றது. மேலும், ஒரு சிலரால், ஒன்றும் செய்ய இயலாத நிலை ஏற்படுகின்றது.
அவ்வாறு பாதிக்கப்படும் ஆண்கள், மருத்துவர்களின் ஆலோசனையுடன் வயகரா எனும் மருந்தினை எடுத்துக் கொள்கின்றனர். இந்த வயகரா வகை மருந்துகளானது, ஆணுறுப்பில் உள்ள நரம்புகளுக்கு, இரத்த ஓட்டத்தினை அதிகரித்து பிறப்புறுப்பின் செயல்வேகத்தினை கூட்டுகின்றது. இதனால், அதிக நேரம் உடலுறவில் ஈடுபடுதல், அதிக விறைப்புத் தன்மை, சில சமயம் ஆண்குறி பெரிதாகுதல் உள்ளிட்ட விஷயங்களும் ஏற்படுகின்றன. இந்த வயகரா வகை மருந்துகளானது, பெண்களுக்கும் இருக்கின்றன.
இவைகளில், அதிக விலையுயர்ந்ததாக இந்த இமாலய வயகாரா எனப்படும் யர்ஷகும்பா உள்ளது. இது, இமாலயப் பகுதிகளில் விளைவதால், இதற்கு இமாலய வயகரா என்றுப் பெயர். இதனை சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் யர்ஷகும்பா என அழைக்கின்றனர்.
இது ஒரு வகையான காளான் ஆகும். இந்த காளான்கள், பொதுவாக இமாலயம், அருணாச்சல் பிரதேசம், மியான்மர், நேபாளம், திபெத், பூட்டான் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வளர்கின்றது. இது மஞ்ள் கம்பளிப் பூச்சியின் உடலில் இருந்து உருவாகின்றது. மஞ்சள் கம்பளிப் பூச்சியானது, மண்ணில் விழுந்து இறந்த பின், அதில் இருந்து காளான் முளைக்கும். அப்படி முளைக்கின்ற இந்தக் காளான்கள் தான் இமாலய வயகரா என அழைக்கப்படுகின்றன.
இது ஆஸ்துமா, ஆண்மைக் குறைவு, டயாலிசிஸ், கேன்சர், லுகேமியா உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றது. இந்த மருந்தினை, சீனா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதன் ஒரு கிலோவின் விலையானது, 32,000 டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில், 25,00,000 ரூபாய் ஆகும்.
ஒரு நாளைக்கு, அதிகபட்சமாக, இமய மலைப்பகுதிகளில் தேடினால், நூறு காளன்கள் வரைக் கிடைத்து வந்த நிலையில், தற்பொழுது வெறும் 2 முதல் 10 வரையிலேயே கிடைக்கின்றன. அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது வெப்பநிலை உயர்வே ஆகும். சுமார் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் மட்டுமே, இந்த காளான் உருவாகும். ஆனால் ஆண்டுக்கு 1.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்வதால், இந்த காளானின் வளர்ச்சியானது குறைந்துள்ளது.
இதனை 0.5 முதல் 0.7 கிராம் அளவில் பாலில் கலந்து, அதனை பால் அல்லது சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர, ஆண்மைக் குறைவு சரியாகும். பலவித நோய்களும் குணமாகும்.