10 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா! அலறும் வாரியம்!

24 June 2020 அரசியல்
coronavacine.jpg

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பத்து வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், நான்கரை லட்சம் பேர், உலகம் முழுக்கப் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் நாட்டிலும், இந்த வைரஸ் பாதிப்பானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இந்த சூழ்நிலையில், இங்கிலாந்திற்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தயாராகி வருகின்றது. அந்த அணியின் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், முதலில் மூன்று வீரர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், தற்பொழுது மொத்தம் ஏழு வீரர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து, அது வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஷதாப் கான், ஹைதர் அலி, ஹரீஷ் ராப், இம்ரான் கான், காஷிப் பாட்டி, முஹம்மத் ஹபீஸ், முஹம்மத் ஹூசைன், முஹம்மத் ரிஸ்வான், பகர் ஜாமன் மற்றும் வஹாப் ரியாஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

முதலில் மூன்று பேருக்கு மட்டும் பரவி இருந்த நிலையில், தற்பொழுது கூடுதலாக 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மொத்தமாக பத்து வீரர்களுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி இருப்பதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன், ஷகீத் அப்ரிடிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது இவ்வளவு வீரர்களுக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

HOT NEWS