மதுரையில் ஒரே நாளில் 10 பேர் பலி! அதிகரிக்கும் தொற்று! மார்க்கெட்டுகள் மூடல்!

26 June 2020 அரசியல்
lockdown.jpg

மதுரையில் நாளுக்கு நாள், கொரோனா வைரஸ் பாதிப்பானது அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், ஒரே நாளில், நேற்று 10 பேர் ஒரே வார்டில் மரணமடைந்து உள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பானது அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும், 3509 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில், சென்னையைத் தவிர்த்துப் பிறப் பகுதிகளிலும் தற்பொழுது கொரோனா வைரஸ் அதிகளவில் பரவ ஆரம்பித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் மதுரையில், 203 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால், மதுரையில் முழு ஊரடங்கானது கடுமையாகக் கடைபிடிக்கப்படுகின்றது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா பிரிவில், ஒரே வார்டில் உள்ள 10 நோயாளிகள் திடீரென்று அடுத்தடுத்து இறந்ததால் பதற்றம் உருவாகி உள்ளது.

மேலும், பறவை பகுதியில் அமைந்துள்ள மார்க்கெட்டில் வேலை செய்தவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த மார்க்கெட் தற்பொழுது மூடப்பட்டு உள்ளது. மேலும், மாட்டுத்தாவணி மார்க்கெட்டிலும் சுகாதாரத்துறைப் பணியாளர்கள் பரிசோதனை செய்தல், மருந்து தெளித்தல் உள்ளிட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையினைக் காட்டிலும், மதுரையில் மருத்துவ வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இந்த சூழ்நிலையில், திடீரென்று வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ள கொரோனா வைரஸால் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

HOT NEWS