சிரியாவில் 100 பேர் பலி! உள்நாட்டுப் போரில் பயங்கரம்!

26 February 2020 அரசியல்
syriantroops.jpg

சிரியாவில், தற்பொழுது உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. இதில், நேற்று ஒரே நாளில், 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போரானது நடைபெற்று வருகின்றது. இதில், சிரியாவின் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில், போர் நடைபெற்று வருகின்றது.

இதுவரை, பல்லாயிரக்கணக்கானோர் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர், தங்களுடைய சொந்த இடத்தினை விட்டு, வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, சிரிய இராணுவத்தினை சேர்ந்தவர்களும், கிளர்ச்சியாளர்களும் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், பலரும் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முழுவதும், இரு பிரிவினருக்கும் இடையில் போர் நடைபெற்றது. கிளர்ச்சியாளர்களின் தலைமையிடமாக இத்திலிப் மாகாணம் உள்ளது. அதனை மீட்க, சிரிய படைகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த இத்திலிப் மாகாணத்தில் அமைந்துள்ள, நைராப் நகரினை சமீபத்தில் நடந்த தாக்குதலில், சிரிய இராணுவம் மீட்டது. அதனை மீண்டும் கைப்பற்ற, கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில், இரு தரப்பினரும், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டும், வெடிகுண்டுகளை வீசியும், ராக்கெட் மூலமும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், 53 கிளர்ச்சியாளர்களும், 41 இராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். மேலும், துருக்கி இராணுவமும், சிரிய இராணுவப் படையினர் மீது நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இழந்த நைராப் நகரினை மீண்டும் கைப்பற்றியுள்ளது சிரிய கிளர்ச்சியாளர்கள் குழு.

HOT NEWS