மேற்குவங்கத்திற்கு 1000 கோடி நிதி! மோடி அறிவிப்பு!

23 May 2020 அரசியல்
narendramodiamphan.jpg

அம்பன் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்திற்கு, 1000 கோடி ரூபாய் வழங்கப்படும் என, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

வங்கக் கடலில் உருவான அம்பன் புயலால், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனை நேற்று, ஹெலிகாப்டரிலேயே பார்வையிட்டார் பாரதப் பிரதமர் மோடி. பின்னர், புயல் பாதிப்பு குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜியுடன் உரையாடினார்.

இந்த புயலால் 72 பேர் மரணமடைந்து உள்ளதாக, மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜி அறிவித்துள்ளார். ஒரு லட்சம் கோடி அளவிற்கு, இழப்புகள் ஏற்பட்டு உள்ளதாகவும், ஆதலால் மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் எனவும், மம்மதா கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து, ஆய்வு முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, இந்த புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்திற்கு 1000 கோடி ரூபாயினை வழங்கியுள்ளார்.

மேலும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் எனத் தெரிவித்தார். புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இது குறித்துப் பேசிய மம்மதா, இந்த 1000 கோடி என்பது முதற்கட்ட உதவியா அல்லது முழு உதவியா எனத் தெரியாது. தொடர்ந்து, மத்திய அரசு இந்த புயலுக்கு அடுத்தக் கட்ட உதவியினை வழங்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

HOT NEWS