உலகப் புகழ்பெற்ற ஐபிஎம் நிறுவனம், தன்னுடைய பணியாளர்கள் 1000க்கும் அதிகமானோரை பணிநீக்கம் செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், உலகின் பல நாடுகளும் ஊரடங்கினைப் பின்பற்றி வருகின்றன.
பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பல நாடுகள் கிட்டத்தட்ட பொருளாதார பின்னடைவை சந்தித்து உள்ளன. இதனால், பல கோடி வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக, புதிய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவங்களுள் ஒன்றான, ஐபிஎம் தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்த, 1000க்கும் மேற்ப்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பணிபுரிந்த ஊழியர்களை இந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. உலகின் பிரபல நிறுவனமே, தற்பொழுது பணி நீக்கம் செய்து வருகின்ற சூழ்நிலையில், மற்ற நிறுவனங்களும் தங்களுடைய பணியாட்களை குறைக்கும் வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.