தமிழகத்திற்கு கிடைத்த ஜாக்பாட்! 10000 கோடியில் குவிந்த முதலீடுகள்!

21 July 2020 அரசியல்
edappadicovid19.jpg

தமிழகத்திற்கு தற்பொழுது பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, புதிய முதலீடுகள் வந்துள்ளன.

தமிழக அரசாங்கம் தற்பொழுது, 10,399 கோடி மதிப்புள்ள எட்டுப் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது. இதன் மூலம், 13,507 வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் கூறப்பட்டு உள்ளது. இந்த அளவிலான முதலீடுகள் அனைத்தும், சோலார் செல்கள், டேட்டா சென்டர்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஐந்து பேர் நேரடியாக கலந்து கொண்டனர். மூன்று பேர் இணைய வழி மூலம் கலந்து கொண்டனர்.

HOT NEWS