101 தாத்தா கொரோனாவில் இருந்து குணமானார்! யாரு சாமி இவரு?

28 March 2020 அரசியல்
coronalockdown1.jpg

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸிற்கு தற்பொழுது வரை 25,000 பேர் மரணமடைந்து உள்ளனர். 5,50,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக, அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இத்தாலியில் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையானது, 9,000 தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 939 பேர் மரணமடைந்துள்ளனர். இத்தாலியினைம் தொடர்ந்து, ஸ்பெயின் நாட்டில் தான், இறந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

சீனாவில் இந்த நோயால் நேற்று மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளனர். இந்நிலையில், இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்த 101 வயதுடைய பெரியவர் ஒருவர், இந்த நோயில் இருந்து குணமடைந்துள்ளார். இதனை, இத்தாலி நாட்டின் ரிமீனி நகர துணை மேயர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ரிமீனி நகரத்தின் துணை மேயர் குளோரியா லிசி பேசுகையில், மிஸ்டர் பி எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பெரியவர், 1919ம் ஆண்டு பிறந்தவர். அவருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனால், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், மிஸ்டர் பியின் உடல்நலம் நன்றாக முன்னேற்றம் அடைந்துள்ளது.

அவருடைய உடலில், தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் தெரியவில்லை. அவர் தற்பொழுது அவருடைய குடும்பத்தாருடன் வீட்டிற்குச் சென்றுள்ளார். இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். இதனால், மருத்துவர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல், இந்த நோய் குறித்துப் பயப்பட வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

HOT NEWS