பீகாரில் இடி விழுந்து 107 பேர் பலி! ஒரே நாளில் நடந்த கொடூரம்!

26 June 2020 அரசியல்
lightninglatest.jpg

பீகாரில் ஒரே நாளில் இடி மற்றும் மின்னல் காரணமாக, 107 பேர் வரை பலியாகி உள்ள அதிர்ச்சி சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இன்று ஒரே நாளில், பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட மின்னல் காரணமாக, சுமார் 83 பேர் உயிரிழந்து உள்ளதாக பீகார் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், பீகார் மாநிலமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஒரு பக்கம் கொரோனாவைரஸ் காரணமாக, அம்மாநிலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. அதே போல், உத்திரப் பிரதேசத்திலும் இந்த இடி மின்னல் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், இப்படிப்பட்ட அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் கவலையினை ஏற்படுத்தி உள்ளது. கோபால்காஞ்ச் மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 பேரும், கிழக்கு சேம்பரான் பகுதியில் 5 பேரும், சிவான் மற்றும் பாகல்பூர் பகுதிகளில் தலா 6 பேரும், தர்பாங்கா, பாகா ஆகிய பகுதிகளில் தலா 5 பேரும், மதுபானி, நவாடா உள்ளிட்டப் பகுதிகளில் தலா 8 பேரும், ஹகாரியா, அவுரங்காபாத் ஆகிய இடங்களில் தலா 3 பேரும், புக்சர், கைமூர், சுபாவுல், பூர்னியா, ஜாமூயி, ஜஹன்னாபாத், கிஷாங்கன்ச், மேற்கு சேம்பரான் உள்ளிட்ட இடங்களில் தலா 2 பேரும், சமாஸ்திபூர், சியோஹர், சாரான், சீதாமர்ஹி, மதிபூரா உள்ளிட்ட மாவடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

HOT NEWS