சீனப் பொருட்கள் மீது 10% கூடுதல் வரி! டிரம்ப் அதிரடி!

04 August 2019 அரசியல்
publicexam.jpg

அமெரிக்காவில் விற்கப்படும் சீனப் பொருட்களுக்கு, கூடுதலாக 10% வரி விதிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய வரிவிதிப்பு, வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சுமார் 250 பில்லியன் அளவிற்கு சீனா, தன்னுடையப் பொருட்களை அமெரிக்காவில் விற்று வருகிறது. அப்படி விற்கும் நாடு, தன் நாட்டில் இருந்து, விவசாயப் பொருட்களை வாங்க மறுக்கிறது என, அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வியாபார ஒப்பந்தங்களை சீனா மதிப்பில்லை எனவும், இதன் காரணமாக, அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்கள் மீது கூடுதலாக 10% வரியை விதிக்கவும், முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே, நீண்ட காலமாக பொருளாதாரப் பஞ்சாயத்து மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்பொழுது டிரம்பின் இந்த அதிரடி முடிவுக்கு பதிலடியாக, சீனா என்ன செய்யக் காத்திருக்கிறது என, நிபுணர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

HOT NEWS