10 & 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் அரையாண்டு, காலாண்டிலும் தேர்ச்சி!

20 June 2020 அரசியல்
sengottaiyanka.jpg

பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு படித்த மாணவ மாணவியர்கள் அனைவரும், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்விலும் தேர்ச்சி என, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளன. இந்த சூழ்நிலையில், பத்தாம் வகுப்புப் படித்த அனைத்தும மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

மேலும், அவர்களுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண்ணானது, அவர்களுடனைய காலாண்டு, அரையாண்டு ஆகிய மதிப்பெண்கள் அடிப்படையிலும், வருகைப் பதிவேட்டின் அடிப்படையிலும் வழங்கப்படும் என்றுக் கூறினார். இந்நிலையில், தனியார் பள்ளிகளில் மதிப்பெண்களை அதிகம் வழங்குவதற்காக குளறுபடிகள் நடக்கின்றன என்றப் புகார் வந்ததை அடுத்து, அவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

இந்நிலையில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் பல ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சிப் பெறாதது அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது குறித்து, பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் தகவல் கொடுத்தனர். இதற்கு தற்பொழுது தமிழகப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்காக அறிவித்ததன்படி, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்துள்ளார். இதனை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சர்குலராக அனுப்பியும் உள்ளார்.

HOT NEWS