பத்தாம் வகுப்பு பொதுதேர்வு! நெறிமுறைகள் வெளியானது!

29 May 2020 அரசியல்
sengottaiyan1212.jpg

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதுவோர்களுக்கான, நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வானது, வருகின்ற ஜூன் 15ம் தேதி தொடங்க உள்ளது. இதனை, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பினைக் கருத்தில் கொண்டு, மாணவர்களுக்காக புதிய நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை, தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பொதுத் தேர்வு எழுத வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களை, வீடுகளில் தனிமைப்படுத்தக் கூடாது. வெளியூரில் இருந்து வந்த தேர்வு எழுதும் மாணவர்கள், நேராகத் தேர்வு எழுதச் செல்லலாம். வெளியூரில் இருந்து தேர்வு எழுத வரும் மாணவர்களை, தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மாணவர்களுக்கான விடுதிகளை வருகின்ற ஜூன் 11ம் தேதி வரை திறந்து வைக்கவும் உத்தரவிட்டுள்ளது தமிழக பள்ளிக் கல்வித்துறை.

மேலும், தேர்விற்கு வருகின்ற மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்களுக்கு இலவச முகக் கவசம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறுவது உறுதியாகி உள்ளது.

HOT NEWS