பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

23 March 2020 அரசியல்
publicexam.jpg

பத்தாம் வகுப்பிற்கு நடத்தப்பட இருந்த, பொதுத்தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 27ம் தேதி தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸானதுப் பரவ ஆரம்பித்துள்ளது. இதனை முன்னிட்டு, மார்ச் 24ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை, அனைத்து மாவட்டங்களுக்கும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தமிழகத்தின் அனைத்து மாவடங்களின் எல்லைகளும் சீல் செய்யப்பட உள்ளன. இதனால், மார்ச் 27ம் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதியானது, பின்னர் அறிவிக்கப்படும் எனவும், கேள்வித் தாள்கள் இருக்கும் அறையானது, போலீஸார் மூலம் பாதுகாக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை, கேள்வித்தாள்கள் அனைத்தும், தேர்வுக் கட்டுப்பாட்டு மையத்தில் தான் இருக்க வேண்டும் எனவும், வெளியில் செல்லக் கூடாது எனவும் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. முதன்மை கல்வி அலுவலர் ஒருவராவது பணியில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. 24 மணி நேரமும், துப்பாக்கி ஏந்தியப் போலீஸ் பாதுக்காப்பும் போடப்படும் என கூறியுள்ளது.

HOT NEWS