10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! 100% தேர்ச்சி!

10 August 2020 அரசியல்
publicexam.jpg

தமிழகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, 10ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவானது இன்று வெளியானது.

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல், ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த முறை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்புத் தேர்வானது தள்ளி வைக்கப்பட்டது. இந்த சூழலில், 10ம் வகுப்புத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என, எதிர்கட்சிகள் வற்புறுத்தின.

கடந்த ஜூன் மாதம், இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்புப் பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன் படி, இன்று 10ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், பத்தாம் வகுப்புப் படித்து வந்த 9,39,829 பேரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

அதில், 4,68,070 மாணவியரும், 4,71,759 மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர். தேர்வு முடிவுகள் மீது ஏதேனும் திருத்தங்கள் இருப்பதாக தோன்றினால், 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், வருகின்ற 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை தற்காலிக மதிப்பெண்களை, அந்தந்தப் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதன் முறையாக, மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

HOT NEWS