உத்திரப் பிரதேசத்தில் 11 பேல் கலவரங்களால் பலி!

23 December 2019 அரசியல்
cabprotest.jpg

தேசியக் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பலத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், உத்திரப் பிரதேசத்தில் மட்டும் இந்தப் போராட்டங்களால், சுமார் 11 பேர் வரை தற்பொழுது பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017ம் ஆண்டு 18 வயதுக்குட்டப்பட்ட சிறுமியினை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜக உறுப்பினரும், உத்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினருமான குல்தீப் சிங் சங்கார் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நேற்று உத்திரப் பிரதேச மாநிலத்தில், பல்வேறு இடங்களில், தேசியக் குடியுரிமை மசோதாவிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் மற்றும் வன்முறையின் காரணமாக பல பேர் காயம் அடைந்தனர்.

கலவரம் பெரியதாக மாறியதால், போலீசார் தடியடியில் ஈடுபட்டனர். மேலும், ஒரு சில இடங்களில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதில் துரதிர்ஷ்டவசமாக ஐந்து பேர் உயிரிழந்தனர்.

மேலும், கலவரங்களில் படுகாயமடைந்த ஆறு பேர் பலியானதாகவும் டிஜிபி ஓபி சிங் உறுதிபடுத்தி உள்ளார். உத்திரப்பிரதேசத்தில், மேலும் கலவரம் ஏற்படாமல் இருக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS