1150 பேர் பலி! 43,500 பேர் பாதிப்பு! சார்ஸை மிஞ்சிய கொரோனா வைரஸ் உயிர் பலி!

12 February 2020 அரசியல்
coronaviruschina.jpg

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்பொழுது வரை 1150 பேர் பலியாகி உள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வைரஸ் காரணமாக, 43,500 பேர் பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர்.

நாளுக்கு நாள், இந்த கொரோனா வைரஸ் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை விகிதம் அதிகரித்து வருகின்றது. தற்பொழுது ஒரு நாளைக்கு 200 பேர் வரை மரணமடைந்து வருகின்றனர். இதனால், சீனாவின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. இந்த நோயினைக் கட்டுப்படுத்த, பல நடவடிக்கைகளை சீன அரசாங்கம் எடுத்து வருகின்றது.

இருப்பினும், இந்த கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாத நிலை நிலவி வருவதால், உலக சுகாதார அமைப்பு, தன்னுடைய மருத்துவக் குழுவினை தற்பொழுது சீனாவிற்கு அனுப்பியுள்ளது. இந்தக் குழுவானது, சீனாவிற்கு சென்று, அங்கு இந்த வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் பரவியுள்ளது.

சீனாவில் மட்டும், இந்த வைரஸால் மரணம் நிகழ்ந்து வந்த நிலையில், தற்பொழுது, சீனாவினைத் தவிர்த்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் மரணம் ஏற்பட்டுள்ளது. எவ்வளவு, மருத்துவ உதவிகள் அளித்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க முடியாமல், அரசாங்கங்கள் திணறி வருகின்றன. சீனாவில், இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த 4,000 பேர் தற்பொழுது முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS