11.33 கோடி ரூபாய் கொரோனா சிகிச்சை கட்டணம்! அதிர்ந்து போன நோயாளி!

02 June 2020 அரசியல்
medicalbill.jpg

கொரோனா வைரஸ் சிகிச்சை எடுத்துக் கொண்டவருக்கு, 11.33 கோடி ரூபாய் பில் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால், அந்த நோயாளி அதிர்ச்சியில் உள்ளார்.

அமெரிக்காவின் டென்வர் நகரில் அமைந்துள்ள ராபர்ட் டென்னஸ் மருத்துவமனையில், கொரோனா நோய்க்காக ஸ்கைய் ரிச்சட் என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது அவர் பூரண குணமடைந்து, வீடு திரும்பி விட்டார்.

தொடர்ந்து இரண்டு வாரம், வெனடிலேட்டர் உதவியுடன் அவர் உயிர் வாழ்ந்து வந்தார். பின்னர், குணமடைந்து வீடு திரும்பியதால், அவருக்கு மருத்துவமனையில் இருந்து பில் அனுப்பி வைக்கப்பட்டது. அதனைப் பார்த்தவருக்கு தலையே சுற்றிவிட்டதாம். ஆம் மொத்தமாக 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை பில்லாக அனுப்பி வைத்துள்ளனர்.

அதாவது இந்திய மதிப்பில் சுமார், 11.33 கோடி ரூபாய் ஆகும். இது அவருக்கும் அவருடைய மனைவிக்கும் சேர்த்து அனுப்பி வைக்கப்பட்ட பில் என, மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இவர் ஏற்கனவே, அமெரிக்காவில் வழங்கப்படுகின்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளதால், அவர் இந்தப் பணத்தினைக் கட்டத் தேவையில்லை. காப்பீட்டு நிறுவனமே அவருக்காக பணம் செலுத்திவிடும். இது தற்பொழுது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளது.

HOT NEWS