9 நாளில் 600கிமீ பயணம்! தந்தையை சுமந்த 11 வயது சிறுவன்! வாடும் வட இந்தியா!

28 May 2020 அரசியல்
migrantworkers124.jpg

கடந்த ஒன்பது நாளில் 600 கிலோமீட்டர் பயணம் செய்து, தன்னுடைய பாதிக்கப்பட்ட தந்தையை, சொந்த ஊருக்கு மீட்டு வந்த 11 வயது சிறுவன் குறித்த நெகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மே 31ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். புலம் பெயரும் தொழிலாளர்களில் பலரும் இந்த ஊரடங்கால் மோசமாக பாதிக்கப்பட்டனர். பலர் மரணமும் அடைந்துள்ளனர்.

இந்த புலம் பெயரும் தொழிலாளர்களுக்காக, சிறப்பு ரயில்களை மத்திய அரசு தற்பொழுது ஒரு சிலக் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக இயக்கி வருகின்றது. இத்தகைய சூழலில், பல லட்சம் பேர் நடைபயணமாக, தங்களுடைய சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள மார்பிள் கடையில் வேலை செய்தவர் தான் இஸ்ராபில். இவருக்கு, நாற்பது நாட்களுக்கு முன்பாக, காலில் பலத்தக் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அவரால் தொடர்ந்து வேலைக்குச் செல்ல இயலவில்லை. அதுமட்டுமின்றி, ஊரடங்கு காரணமாக அவருக்கும், அவருடன் தங்கியிருந்த அவருடைய மகனுக்கும் அடிப்படை வசதிகளுக்கு கூட காசில்லை.

இதனை முன்னிட்டு, தங்களுடைய சொந்த மாநிலமான பீகாருக்குச் செல்லத் திட்டமிட்டனர். இருப்பினும், அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, அவருடைய மகனிடம் மூன்று சக்கர வாகனத்தினைக் கொடுத்து, ஓட்டும் படிக் கூறியுள்ளார். 11 வயதே உடைய அவருடைய மகன், தபாரக் தொடர்ந்து, ஒன்பது நாட்களாக அந்த மூன்று சக்கர வாகனத்தினை ஓட்டியுள்ளார்.

அந்த வாகனத்தில் தன்னுடையத் தந்தை, மற்றும் அவர்களுடையப் பொருட்களை ஏற்றிக் கொண்டு பயணம் செய்துள்ளார். இறுதியாக, அவர்கள் தங்களுடைய சொந்த ஊரினை அடைந்துள்ளனர். இந்த கொடுமையான சம்பவம், இது குறித்து அறிந்தவர்களின் மனதினை நெகிழ வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

HOT NEWS