மேற்கு வங்கத்தினைக் கதற விட்ட அம்பன் புயல்! 12 பேர் பலி!

21 May 2020 அரசியல்
amphancyclone.jpg

மேற்கு வங்கத்தினை நேற்றுக் கடந்த அம்பன் புயலால், 12 பேர் பலியாகி உள்ளதாக, அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இருந்த நிலையில், திடீரென்று புயலாக மாறி வேகமாக வீச ஆரம்பித்ததால் அதற்கு அம்பன் எனப் பெயரிட்டனர் வானிலை அதிகாரிகள். இந்த அம்பன் புயலானது, விசாகப்பட்டினம் வழியாக, தொடர்ந்து மேற்கு வங்கத்தின் கொல்கத்தாப் பகுதியில் கரையினைக் கடந்தது.

இந்த புயலானது, சுமார் 185 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதால், கடுமை மழையும் பெய்தது. வீட்டின் கூரைகள் வீசி எறியப்பட்டன. பல வாகனங்கள் காற்றின் வேகத்தால், சாலைகளில் உருண்டு ஓடின. கடைசியாக வங்கதேசத்தின் மூலம் சென்ற அம்பன் புயல் கரையினைக் கடந்தது.

இந்தப் புயல் குறித்துப் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜி, கொரோனா வைரஸை விட இந்த அம்பன் புயல், கடுமையான சேதத்தினை ஏற்படுத்தி இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் எனக் கூறியுள்ளார். இந்த புயலால், ஒரு லட்சம் கோடி அளவிற்கு இழப்புகள் ஏற்பட்டு இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த அம்பன் புயலால், ஹவுரா, கொல்கத்தா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், பர்கானாஸ், புருலி பங்குரா உள்ளிட்டப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனவும், 10 முதல் 12 பேர் வரை இந்தப் புயலால் மரணமடைந்து இருக்கலாம் எனவும் கூறினார். மத்திய அரசு, மேற்கு வங்கத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

HOT NEWS