உத்திரப் பிரதேசத்தில் பன்றிக் காய்சலால் 12 பேர் பலி!

02 March 2020 அரசியல்
vaccination.jpg

உத்திரப் பிரதேசத்தில் பன்றிக் காய்ச்சல் எனப்படும், ஹெச்1என்1 வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. இதற்கு, தற்பொழுது வரை 12 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலம், மீரட் நகரில் உள்ள ஆயுதப் படையினர் ஒரே மைதானத்தில், முகாமிட்டு உள்ளனர். அவர்களில், 17 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பிற்கான அறிகுறிகள் இருப்பதாக, கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த 17 பேரையும் தனியாக மருத்துவ சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்கள் வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட உள்ளது. மற்றவர்கள், பிற இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

உத்திரப் பிரதேசத்தின் மீரட் நகரில் மட்டும், தற்பொழுது வரை 78 பேர் இந்த பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையை, மாநில சுகாதாரத் துறையானது மிகவும் கவனமாக கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் வைப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் ஒதுக்கப்பட்டு, மருத்துவ மனைகளும் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

HOT NEWS