12 பேர் கழுத்தறுத்து கொலை! மெக்சிகோவில் பயங்கரம்!

07 October 2020 அரசியல்
mafiagangster.jpg

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தும் கும்பலால், பெண்கள் உட்பட 12 பேர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில், போதைப் பொருள் விற்கும் கும்பல்கள் ஏராளமாக உள்ளன. அவைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மெக்சிகோ அரசாங்கமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இருந்த போதிலும், அவைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த கும்பல்களுக்கு இடையில், போட்டியின் காரணமாக சண்டைகள் நடைபெறுவது வழக்கம். இந்த சண்டைகளால் பல ஆயிரம் பேர், பரிதாபமாக கொல்லப்பட்டு உள்ளனர்.

இதற்காகவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில், சுவர் எழுப்புவதற்கு முயற்சித்து வருகின்றார். இவ்வளவுப் பிரச்சனைகள் உள்ள நாட்டில், தற்பொழுது அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்று உள்ளது. அந்நாட்டின் சான் லூயிஸ் போதோசி மாகாணத்தில் உள்ள வில்லா டி ராமோஸ் என்ற நகரில், சாலையின் ஓரத்தில் 2 வேன்கள் கேட்பாரற்று தனியாக நின்று கொண்டு இருந்தன. இதனால், அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர்.

இதனை அடுத்து, போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு அந்த வாகனத்தில் சோதனை செய்தனர். அதில், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வேன்கள் இரண்டிலும் தலா ஆறு பிணங்கள் என, மொத்தம் 12 பிணங்கள் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கிடந்தன. அருகில் கடிதம் ஒன்றும் இருந்தது. அதில், போதைப்பொருட்கள் கும்பலுக்கு இடையில் நடைபெற்ற சண்டையில் இவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில், 2 பெண்களின் உடல்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS