கடந்த சில நாட்களாக, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான ப்ரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தொடர்ந்து யோகி ஆதித்யநாத் ஆட்சியின் மீது குறைக் கூறி வருகின்றனர்.
அவருடைய ஆட்சியில், உத்திரப் பிரதேச மாநிலத்தில் ரவுடிசம் மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட விஷயங்கள் அதிகரித்துள்ளன எனவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்பட்டு உள்ளது எனவும் கூறினர். இதனால், உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடும் விவாதமே நடைபெற்று வந்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தற்பொழுது உபி போலீசார் புதியத் தகவல் ஒன்றினை வெளயிட்டு உள்ளனர்.
கடந்த 42 மாதங்களில் எங்கும் இல்லாத வகையில், சுமார் 124 ரவுடிகளை எண்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளதாகத் தெரிவித்து உள்ளனர். இதில் அதிகபட்சமாக மீரட் நகரில் 14 நபர்களும், முசாபர்நகரில் 11 நபர்களும் எண்கவுண்டர் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்து உள்ளது. இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் இவ்வளவு எண்கவுண்டர்கள் நடைபெற்று இருப்பதை, போலீசாரே வெளிப்படையாகக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.