நிர்மலா சீதாராமனின் புதிய திட்டம்! 13 மாநிலங்கள் ஆதரவு!

14 September 2020 அரசியல்
nirmala.jpg

ஜிஎஸ்டி இழப்பீட்டிற்கு மாற்றாக, ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற புதிய திட்டத்திற்கு, 13 மாநிலங்கள் தங்களுடைய ஆதரவினைத் தெரிவித்து உள்ளன.

இந்தியா முழுக்கத் தற்பொழுது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. நாளுக்கு நாள், இந்தியாவின் பொருளாதாரம் சரிவினை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றது. இதனால், இந்தியாவின் மாநிலங்கள் பலவும், ஜிஎஸ்டி இழப்பீட்டினை தர வேண்டும் என, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இது குறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.

அதில், மாநில அரசுகளுக்குத் தேவைப்படுகின்ற நிதியினை, ரிசர்வ வங்கியிடம் இருந்து கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார். அதற்கு தற்பொழுது இந்தியாவின் 13 மாநிலங்கள் ஆதரவினைத் தெரிவித்து உள்ளன. ஆந்திரா, பீகார், சிக்கிம், திரிபுரா, உத்திரப் பிரதேசம், உத்ரகாண்ட், ஒடிசா, மேகாலயா, சிக்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் ஆதரவளிக்கின்ற நிலைப்பாட்டினை எடுத்துள்ளன.

மேலும், கோவா, அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மீசோரம், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஆதரவளிக்கும் நிலையில் உள்ளன. தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் முதலியவை இதனை மறுபரிசீலனை செய்யும் படி, கடிதம் எழுதியுள்ளன.

HOT NEWS