தமிழ்நாட்டில் 12! இந்தியா முழுக்க 130! ரெட்ஸ்பாட் மாவட்டங்கள்!

02 May 2020 அரசியல்
modicovid19.jpg

இந்தியா முழுவதும், மே-3ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவானது முடிவடைகின்ற நிலையில், அதனை மேலும் 2 வாரம் கூட்டி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் அளவானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், மேலும் ஊரடங்கினை நீட்டிப்பது குறித்து, மத்திய அரசு மிகத் தீரவிரமாக ஆலோசனை செய்தது. அதனடிப்படையில், தற்பொழுது நடப்பில் உள்ள ஊரடங்கு உத்தரவானது, மே-17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்தியாவில் ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ள ரெட் சோன், ஆரஞ்சு சோன் மற்றும் கிரீன் சோன் உள்ளிட்டப் பகுதிகளைப் பற்றியும் அறிவித்துள்ளது மத்திய அரசு. இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பிரீத்தி சுதன் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் மொத்தமாக, 130 சிவப்பு மண்டலங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. 284 ஆரஞ்சு மண்டலங்களும், 319 பச்சை மண்டலங்களும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டினைப் பொருத்தமட்டில், 12 மாவட்டங்கள், சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. ஒரு பச்சை மண்டலமும், 24 ஆரஞ்சு மண்டலமும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பச்சை மண்டலத்தில் மட்டும், ஊரடங்கு உத்தரவானது, தளர்த்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து 28 நாட்களுக்கு எவ்வித கொரோனா வைரஸ் தொற்றும் இல்லாத பட்சத்தில் மட்டுமே, சிவப்பு மண்டலமானது பச்சை மண்டலமாக மாற்றப்படும். அதே போல், 14 நாட்களுக்கு எவ்வித கொரோனா தொற்றும் இல்லாவிட்டால் மட்டுமே, ஆரஞ்சு மண்டலமானது பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS