ஈபிஎப் வசதி மூலம் விரைவில் பணம் எடுக்கலாம்! 1.37 லட்சம் பேர் பெற்றுள்ளனர்!

11 April 2020 அரசியல்
epfo.jpg

தற்பொழுது வரை, இந்த ஊரடங்கு காலக் கட்டத்தில் 1.37 லட்சம் பேர், தன்னுடைய பிஎப் பணத்தினை எடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா முழுவதும், ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகும், இந்த ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்குக் கூட, பணம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இதற்காக தங்களுடைய வங்கிக் கணக்குகளில் வைத்திருந்த பணத்தினை எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர், தங்களுடைய வைப்பு நிதியினைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், பிஎப் பணத்தினையும் தற்பொழுது பயன்படுத்துவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள 1.72 லட்சம் பயனர்களில், 1.37 லட்சம் பேர் தங்களுடைய பிஎப் பணத்தினை எடுத்துள்ளனர். நேரடியாகச் சென்று எடுக்க முடியாது என்றாலும், ஆன்லைனில் ஈபிஎப் வசதியினைப் பயன்படுத்தி பணத்தினை எடுத்துள்ளனர். இது குறித்து ஈபிஎப் கூறுகையில், ஆன்லைனில் பணம் எடுக்க எவ்விதத் தடையும் இல்லை.

பணம் எடுக்க 72 மணி நேரமே ஆகும். தற்பொழுது வரை, சுமார் 280 கோடி ரூபாயினை, இந்த ஊரடங்கு காலத்தில் கொடுத்துள்ளோம் என்றுக் கூறியுள்ளது.

HOT NEWS