இணையக் குற்றங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவைகளில் பெரும்பாலானக் குற்றங்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. ஏன், இதனை அரசாங்கத்தாலும் கணக்கிட முடியாது. ஒரு வங்கிக் கணக்கில் இருந்து பத்து பைசா வீதம் பத்து லட்சம் வங்கிக் கணக்குகளில் இருந்து, தினமும் எடுத்தால் கூட யாராலும் கண்டுபிடிக்க இயலாது.
இதனைப் போன்று பலக் குற்றங்கள் தினமும் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு நடைபெற்று வரும் செயல்களில் தற்பொழுது மாபெரும் சம்பவம் நடந்தேறி உள்ளது.
இணையத்தில் மர்ம வலை எனப்படும் டார்க் வெப் என்ற பகுதியில், இதுவரை இல்லாத அளவில், சுமார் 13 லட்சம் இந்தியர்களின் கிரெட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் கசிந்துள்ளன. இந்தத் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
ஆன்லைனில், நாம் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு போன்ற கார்டுகளின் தகவல்களை, எப்படி இவர்கள் கைப்பற்றினர் எனத் தெரியவில்லை. இருப்பினும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
உலகில் இதுவரை இந்த அளவிற்கு, தகவல்கள் கசிந்தது இல்லை. இதுவே முதல் முறை. ஜோக்கர் டேஷ் என்ற வலைதளத்தில் தான் இந்த தகவல்கள் இருக்கின்றன. மேலும், இந்தத் தகவல்கள் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு கிரெட் கார்டு அல்லது டெபிட் கார்டு பற்றியத் தகவலின் விலை, நூறு டாலரில் ஆரம்பிக்கின்றது.
நாம் தொலைக்கின்ற அல்லது திருடப்படுகின்ற கிரெட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகளின் தகவல்களை, இந்த இணையத்தில் பதிவிடுகின்றனர். இது தற்பொழுது, மாபெரும் அதிர்ச்சியை இணைய உலகில் ஏற்படுத்தி உள்ளது.
source:www.zdnet.com/article/details-for-1-3-million-indian-payment-cards-put-up-for-sale-on-jokers-stash/