சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா! யாருக்கு தெரியுமா?

29 August 2020 விளையாட்டு
csk2.jpg

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் உட்பட மொத்தம் 13 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியானது, செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக இந்தியாவின் ஐபிஎல் அணிகள் அனைத்தும், தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, வீரர்கள் அனைவருமே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ஒவ்வொரு வீரரும் விளையாடுவதற்கு முன், இரு முறை கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நேற்று சென்னை அணி வீரர்கள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, சென்னை அணியின் பந்து வீச்சாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. சென்னை அணியில் உள்ள தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய இருவரில் ஒருவக்கு தான், இந்த வைரஸ் தொற்று இருக்க வாய்ப்பிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக குணமானப் பின்னரே, அவர்கள் விளையாட அனுமதிக்கப்படுவர். இன்னும் 3 வாரங்கள் ஐபிஎல் போட்டிகள் தொடங்க நேரம் உள்ளதால், அதற்குள் அனைத்து வீரர்களும் குணமாகி விளையாட ஆரம்பித்து விடுவர் பலரும் நம்பிக்கைத் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS