ஜம்மூ காஷ்மீரில் ஒரே நாளில் 14 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

02 June 2020 அரசியல்
indianarmy.jpg

பாகிஸ்தானைச் சேர்ந்த 14 தீவிரவாதிகளை இந்திய இராணுவத்தினர், ஒரே நாளில் சுட்டுக் கொன்றுள்ளனர். கடந்த மே மாதம் 28ம் தேதி அன்று, ஜம்மூ காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள ரஜோரி என்ற மாவட்டத்தில் உள்ள நவுஷரா பகுதியில் அமைந்துள்ள, எல்லை வழியாக பலத் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக இரகசியத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, இந்திய இராணுவத்தினர் கடும் சோதனையில் ஈடுபட்டனர். அதில், பயங்கர ஆயுதங்களுடன் காணப்பட்ட மூன்று பேரினை இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். மேலும், மெந்தர் என்றப் பகுதியில் பலத் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, தகவல்கள் கிடைத்ததை அடுத்து, இந்திய இராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது, 10 தீவிரவாதிகள் இருப்பதை அறிந்த இராணுவத்தினர் அவர்களை சுட்டு வீழ்த்தினர். மேலும், அதே போல் அவுந்திபராவில் பதுங்கியிருந்த ஒரு தீவிரவாதியினையும் சுட்டு வீழ்த்தியுள்ளனர். மேலும், பலத் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுறுவி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS